தன்னை உணருதல் நிகழ வேண்டுமானால், வாசி யோகம் மட்டுமே மிக விரைவில் தன்னை உணர உதவும் உன்னத முறையாகும்

Share Button

தன்னை உணருதல்

தன்னை உணருதல் நிகழ வேண்டுமானால், வாசி யோகம் மட்டுமே மிக விரைவில் தன்னை உணர உதவும் உன்னத முறையாகும்.

இந்த பிரபஞ்சம் மனிதர்களை படைத்ததன் நோக்கம் வெறுமனே உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்து தன்னை பற்றி ஒன்றும் அறியாமல் விழிப்புணர்வு இல்லாமல் இறந்து போவதற்கு இல்லை. அழியும் இந்த உடலுக்குள் என்றும் அழியாத ஒரு வஸ்து இருக்கிறது.

நமக்கே தெரியாமல் நம்மை அந்த அழியாத சக்தி என்றும் இயக்கி கொண்டு இருக்கிறது. நாம் அந்த சக்திக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

வாசி யோகம்

பிறப்பு, இறப்பு என்கின்ற சக்கரம் நிற்க வேண்டுமானால் தன்னை உணருதல் நிகழ வேண்டும். இந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு பிறப்பில் தன்னை உணருதல் நிகழ வாய்ப்பு அளித்து கொண்டு இருக்கிறது.

இதனை உணராத உயிர்கள் இந்த பிறப்பு, இறப்பு என்கின்ற சக்கரத்தில் சிக்கி கொண்டு இருக்கும். தன்னை உணரும் ரகசியத்தை சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மகாபுருஷர்கள் மறைமுகமாக பாடல்கள் மூலமாகவும், தன்னுடன் வெகு ஆண்டு காலம் இருக்கும் சிஷ்யர்களுக்கும் அளித்து வந்தார்கள்.

உடற்கோவிலில் உள்ள புருவமத்தியத்தில் புதைந்திருக்கும் அந்த சக்தியை கண்டுணர்ந்து அதனுடன் கலப்பதையே தன்னை உணருதல் என்கிறோம்.

உலகத்தில் எத்தனையோ யோக முறைகள் இருந்தாலும் வாசி யோகம் மட்டுமே மிக விரைவில் தன்னை உணர உதவும் உன்னத முறையாகும்.

பிரம்ம ஞானம் | Bramma Gnanam

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *