திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை!

Share Button

திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை – உங்களில் ஒருவன்…

தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறை, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட அறிவியல் வள மையத்தில் 04.10.2019 மற்றும் 05.10.2019 ஆகிய இரு நாட்கள் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பெங்களூர் ஆக்டிவிட்டி எஜுகேட்டர் இயக்குனர் உயர் திரு. பாலமோகன் ஐயா அவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

இரண்டாம் நிகழ்வில் 05.10.2019 உங்களில் ஒருவன் என்றத் தலைப்பில் ஆசிரியர்களிடம் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள கருத்தாளராக நான் (பெ.தனபால்) உயர்திரு பாலமோகன் ஐயா அவர்களால் அழைக்கப்பட்டிருந்தேன்.

நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சுயநிதி பள்ளிகளில் இருந்து 184 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களிடம் அறிவியல் அறிவையும் , ஆர்வத்தையும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்கப்படுத்துதல், அதற்காக அறிவியல் மன்றம், தினந்தோறும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அறிவியல் கோட்பாடுகள், வேதியியல் பண்புளை காண மாணவர்களை ஊக்குவித்தல், அறிவியல் நாடகம், பட்டிமன்றம், வினாடி வினா, அறிவியல் சமன்பாடுகளை தினந்தோறும் எழுதுதல், நாளிதழ்களில் வெளி வரும் அறிவியல் செய்திகளை சேகரிக்கும் துணுக்குப்பெட்டி, சமூகத்தில் நிழவும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அறிவியல் படைப்புகள் உருவாக்குதல், பயன்படுத்திய பொருட்கள் கொண்டு எளிய அறிவியல் சோதனைகள் செய்ய மாணவர்களை ஊக்குவித்தல், களப்பயணம் சென்று அறிவியல் கருத்துக்களை சேகரித்தல் போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை ஆசிரியர்கள் , தங்களது அனுவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பயிலும் 184 பள்ளியில் பயிலும் 1 ,14, 559 மாணவர்கள் காணும் வகையில் அனைத்து ஒன்றியங்களுக்கும் டாக்டர் A . P.J அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் கட்டணமின்றி வழங்கப்பட்டது.

உங்களில் ஒருவன் என்றத் தலைப்பில் அறிவியல் பரப்புதல் பயிற்சிப் பட்டறையில் கருத்தாளராக என்னை அழைத்து அறிவியல் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள மிகவும் பயனுள்ள இந்த வாய்ப்பை வழங்கிய பெங்களூர் ஆக்டிவிட்டி எஜுகேட்டர் இயக்குனர் உயர்திரு பாலமோகன் ஐயா அவர்களுக்கும், ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அவர்களுக்கும், பங்கேற்ற ஆசிரியப் பெருமக்களுக்கும், என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றியுடன்,
கனவு ஆசிரியர் பெ.தனபால்,
கரூர் மாவட்டம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *