சென்னை டூ கோவை வந்தே பாரத் 8 பெட்டிகள் 130 கி.மீ. அரக்கோணம் மற்றும் காட்பாடியில் நிற்குமா?
மொத்தம் 8 பெட்டிகளை கொண்ட சென்னை டூ கோவை சிறிய ரக வந்தே பாரத் தயில் நேற்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
8 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலானது சென்னையில் கிளம்பி சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மார்கமாக கோவை சென்றைடைகிறது.
வந்தே பாரத் ரயில் வேலூர் மாநகரம் காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்காதென தகவல் வெளியாகி உள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் எனக் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் முக்கியமான தகவல் என்னவென்றால் சேலம், ஈரோடு, திருப்பூரை விட அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக வேலூர் காட்பாடி ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிர்வாகத்திற்கே தெரிந்த ஒன்றுதான்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் சிறிய ரக ரயில் அரக்கோணம், காட்பாடி ஆகிய வழித்தடங்களிலும் நின்று செல்ல வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தின் தரம் A (NSG 2) = ஆண்டு வருவாய் 100 முதல் 500 கோடி
சேலம், ஈரோடு , திருப்பூர் ரயில் நிலையத்தின் தரம் A (NSG 3) = ஆண்டு வருவாய் 10 முதல் 100 கோடி
மருத்துவம், கல்வி மற்றும் வணிகம் என தினமும் பல இடங்களிலிருந்து வேலூருக்கு காட்பாடி ரயில் மார்கமாக மக்கள் வருகிறார்கள்.
ஆகவே, வேலூரை தவிர்த்து ஒரு பிரீமியம் ரயில் விடுவது என்பது ரயில்வே நிர்வாகத்திற்கு இழப்பை ஏற்படுத்துமே தவிர வேறொன்றும் இல்லை. இதே வந்தே பாரத் ரயில் இன்னும் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் டெக்னிக்கல் ஹால்ட் என வேலூர் மாநகர் காட்பாடியில் நிறுத்தப்படும்.
காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றால் ஒரு ரயில் நிலையம் அதிகம் ஆகிவிடுகிறது. இதனால் ரயிலின் பயண நேரம் அதிகமாக இருக்கும் என்று தென்னக ரயில்வே யோசிக்கிறது.
முக்கியமாக ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் இந்த ரயிலின் வேகத்தை 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு அதிகரித்தால் மட்டுமே இதன் முழு பயனையும் மக்கள் அடைய முடியும். வட மாநிலங்களில் 150 வரை செல்கிறது.
அதற்கான வேலைகளை தென்னக ரயில்வே விரைவில் முடித்து இந்த ரயிலினை 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முன் வர வேண்டும் இல்லையெனில் இதுவும் சாதாரண ரயில் போல ஆகிவிடும்.
வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். நேற்று அதாவது (8-4-2023) துவக்கப்பட்ட ரயில், வரும் 16 ஆம் தேதிவரை சீட் புக்கிங் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply