தமிழக மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளின் காட்சியமைப்பும் கருத்தரங்கும்!

Share Button

அறிவியல் தொழில் நுட்பம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் தன்னிறைவுக்கும் இறையாண்மைக்கும் ஒரு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுக்கிறது. இன்றைய காலகட்டத்தில் விவசாயம் முதல் விண்வெளிவரை எல்லாத்துறைகளும் அடுத்த கட்டம் நோக்கிய ஆய்வுகளை குறைந்த செலவில் அதிக உற்பத்தி சிறந்த நம்பகத்தன்மை (Improved quality) குறைந்த சேதாரம் மேம்பட்ட மனித வளப் பயன்பாடு என்று பன்முக நோக்கில் நான்கு கால் பாய்ச்சலில் செல்ல வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளன.

நீர்மேலாண்மை நெகிழிக்கு மாற்று அல்லது மக்கும் நெகிழி மின்சார வண்டிகள் மாற்று எரிபொருள் சேதாரக் குறைப்பு என வளர்ந்து வரும் பட்டியல் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு ஒரு புறம் சவால்களையும் மற்றொருபுறம் மிகச் சிறந்த வாய்ப்புகளையும் ஒருங்கே உருவாக்கியுள்ளது.

அறிவியல் தொழில் நுட்பத்தில் பெருகிவரும் வாய்ப்புகளை முன்கூட்டியே அறிந்து சமூதாயப் பங்களிப்புக்கான கண்டு பிடிப்புகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு நாளைய அறிவியல் தொழில் நுட்ப விற்பன்னர்களாக வளரவிருக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உள்ளது. அப்படி மலரவுள்ள தமிழக அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அவர்தம் இறுதி வருடக் கல்லூரிப் படிப்பின் போது அளிக்கப் பட்டிருக்கும் ஒரு வாய்ப்புத்தான் மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத்திட்டம் புத்தாக்கம் புரிய அவர்களின் கல்லூரி கல்வியின் ஒரு அங்கமாக தாம் கற்றவற்றையும் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அறிவியல் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளாக வெளிப்படுத்துவும் ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது.

தமிழ் நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றம் கடந்த 25 வருடங்களாக தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலை மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சிறந்த கண்டிபிடிப்புகளை தமிழகத்தின் மூத்த அறிவியளாளர்களின் உதவியுடன் இனம் கண்டு சிறப்பான ஒரு விழாவில் ஊக்கப்பரிசும் சான்றிதழும் கொடுத்து சிறப்பித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் நிகழும் இந்த நிகழ்வு இந்த வருடம் ஜூலை 19- 20 என்ற இரு நாட்கள் கலசலிங்கம் பல்கலைகழகம் கிருஷ்ணன் கோவிலில் 1782 மாணவிர்களின் 700 கண்டுபிடிப்பவர்களுக்கு அவர்களை அழைத்து அவர்களின் கண்டு பிடிப்புகளைக் காட்சிபடுத்தவும் அவர்கள் சிறப்பிக்கப்படவும் உள்ளார்கள்.

கண்டு பிடிப்பவர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தவும் அதன் மூலம் புதிய கண்டுப்பிடிப்பாளர்களை உருவாக்கும் வண்ணம் இரு நாட்கள் நிகழவுள்ள இந்த வருடத்திற்கான நிகழ்வின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் இதற்குக் காரணமாக இருக்கும் மூத்த அறிவியலாளர்கள், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள், கலசலிங்கம் பல்கலைகழக நிர்வாகம் பயனடையும் மாணவர்கள் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

DR.M.ANNADURAI

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *