தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை

Share Button

சென்னை :-

அறிவியல் தொழில் நுட்பத்தில் தமிழகம் 2021-2030

தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை

ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு எப்படி தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் வாய்ப்பளிக்க முடியும் என்பதை சுருக்கமாகப் பார்ப்போமா?

முதலில் ஆளில்லா விமானங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பட்டியலிடுவோம்…

விவசாயம் :

பூச்சிக்கொல்லி தெளிப்பை சிக்கனமாகவும், சீக்கிரமாகவும், முறையாகவும் தெளிப்பவருக்கு எந்த பாதிப்பும் இல்லாமலும் செய்ய முடியும். தமிழ்நாட்டில் 15,979 கிராமங்களும் 43.47 இலட்சம் ஹெக்டார் விளை நிலங்களும் உள்ளன.

ஒவ்வொரு கிராமத்திற்கும் இரண்டு அல்லது 1500 ஹெக்டாருக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆளில்லா விமானங்களை ஒதுக்கில்கூட 30,000 ஆளில்லா விமானங்கள் தேவைப்படும்.

அப்படி ஒதுப்படும் ஒவ்வொரு விமானத்தின் தேவையும் சராசரியாக வருடத்தில் 200 நாட்களுக்கு மேல் தேவைப்படும்.

பொது சுகாதாரம் : கிருமிநாசினி தெளிப்பு

காவல் துறை : சட்ட மீறல் கண்காணிப்பு

தீயணைப்பு : உயர் கட்டிடங்களுக்கு நீர் பீச்சியடிக்க

மின்சார இலாகா : உயரழுத்த மின் கம்பக் கண்காணிப்பு

உயர் கல்வி : ஆளில்லா விமானத் தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

சுரங்க மேலாண்மை : ஆற்றுப் படுகை மணல் கண்காணிப்பிலிருந்து அனுமதிக்கப்பட்ட சுரங்க நடை முறைக் கண்காணிப்பு வரை.

பேரிடர் மேலாண்மை, சுற்றுலா, காடு வளர்ப்பு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் படபிடிப்பு என்பனவற்றைக் கடந்து செயற்கை மழைக்கான உத்திகள், எல்லைப் பாதுகாப்பு என்று ஆளில்லா விமானங்களுக்கான பயன்பாடுகளின் பட்டியலை முடிவின்றி நீட்டிக் கொண்டே போகலாம்.

இந்தப் பணிகளில் ஆளில்லா விமானங்களை இயக்க மட்டுமே ஐம்பதாயிரத்திற்கும் மேலாக பயிற்சி பெற்ற ஆளில்லா விமான ஓட்டிகள் தேவைப்படும்.

அதைத்தாண்டி ஆளில்லா விமானங்களை உருவாக்கவும், அவற்றிற்கான பாகங்களை உற்பத்தி செய்யவும், அவற்றின் பணிகளை அரசின் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கில் கண்காணிக்கவும் என்பதாக நீளும் பணிகளிலும் பல ஆயிரம் பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

இந்தப் பணிகளைத் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்கள் ஏன் நாடுகள் முன்னெடுக்கும்போது, நமது சென்னையில் உருவான கார்களை மற்ற மாநிலத்தவர்கள் மற்றும் நாட்டினர் உபயோகப்படுத்துவது போல் தமிழகத்தில் உருவாகும் ஆளில்லா விமானங்களை அவர்கள் உபயோகத்திற்கெனவும் தயாரிக்கும் போது மேலும் பல ஆயிரம் பணிகளையும் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கும் தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உதவ முடியும்.

டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை

துணைத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *