விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம் விருது கொடுத்துச் சிறப்பித்தது!
மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம், நவம்பர் 2ம் தேதி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது கொடுத்துச் சிறப்பித்தது.
ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மஸ்கட் வாழ் தமிழர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் விருதைப் பெற்றுக்கொண்டு தனது ஏற்புரையை நிகழ்த்தினார். அந்த உரையில், “தமிழர்கள் தாய்த்தமிழகம் விட்டு புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தங்களுக்குள் எந்த வேறுபாடு இருந்தாலும் தமிழ் என்ற ஒரு குடையின் கீழ் சேர்வது தனிமனிதனாக ஒவ்வொரு தமிழருக்கும், தான் வாழும் தமிழ் சமுதாயத்திற்கும், தனது தாய் மொழி தமிழுக்கும் ஒரு சிறப்புச் சேர்ப்பதாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மஸ்கட் தமிழ் சங்கம் அந்த முனைப்பாட்டில் சிறப்பாகச் செயல்படுவது ஒரு சிறப்பு. எனக்கு இன்று கொடுக்கப்பட்ட விருது , ஒரு தனிப்பட்ட மனிதனாய் நான் வாங்கவில்லை. இந்த விருது இன்று இந்த விழாவை இ அமர்ந்து பார்க்கும் தமிழ் சிறுவர்களுக்கும், இளைஞர்களின் மனதில் விதைக்கப் படும் ஒரு விதை என்பதாய் நான் உணர்கிறேன்.
முத்தமிழை வளர்க்க முயலும் தமிழ் சங்கங்கள் நான்காவது தமிழாய் அறிவியலையும் கையிலெடுப்பதாகவும் உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த விருது மேலும் மேலும் நமது மண்ணுக்கு இன்னும் இன்னும் உழைக்க உற்சாகம் ஊட்டுவதாக உணர்கிறேன்”, என்று ஏற்புரையை நிகழ்த்தினார்.
Leave a Reply