தட்டிக்கொள்ளுங்கள் திறக்கப்படும் : ஊக்கமது கைவிடேல் : Episode-1

Share Button

எக்கருத்தையும் அறிதல் நலம், ஆனால் அதன் அடிப்படையில் அறிதலே முறைமம். அடிப்படையினை அறியாமல் அறிய முயலுதல் அக்கருத்திற்கும், நமக்கும் நாமே செய்யும் துரோகம். அறியாமை நன்று ஆனால் அறியாமையை அறியாமை குற்றம். மகாகவி பாரதி கூறுவதைப்போல்…

”நோக்கும்இடம்எங்கும்
நாமன்றிவேறில்லை
நோக்கநோக்கக்களியாட்டம்”

என்கிற ”சமதரிசனம்” தான் அறிவின் முடிவான பயனாக இருக்கமுடியும் என்பதை உணராமல், அறிவு பெற்றுவிட்டோம் என்று உரைப்பதைப் போல் ”முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் (There is no downward journey for those who keep trying)”, ”தண்ணீரைக்கூட சல்லைடயில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும்வரை பொறுத்தால் (Even water can be held in a sieve, if you wait till it turns to ice.)” என்று வெற்று ஊக்கச் சிந்தனைகளை அள்ளித்தெறித்தல் இந்தத் தொடரின் நோக்கமல்ல. மாறாக, நமக்குள் சென்று, நம்மை அறிந்து, பலம் உணர்ந்து, ஊக்கம் பெற்றுத் தெளிதலே. சிந்தனையின் தெளிவு செயலின் தரம் என்பதைப் போல் உங்களுக்குத் தெரிந்த, படித்த ஒரு சின்னச் சிறுகதையைப் பார்ப்போம்.

ஒருவரின் விலையுயர்ந்த மகிழுந்தை (car) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை ஒருவர் பார்த்தார், அந்தச் சிறுவனின் ஆசையை அறிந்துகொண்ட அவர், சிறுவனை உட்காரவைத்து கொஞ்சதூரம் ஓட்டினார். “உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்னவிலை” எனச் சிறுவன் கேட்டான். அவரோ “தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது” என்றார்.

“அப்படியா!! அவர் மிகவும் நல்லவர்” எனச் சிறுவன் சொல்ல, “நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத் தெரியும், உனக்கும் என் சகோதரனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா?” என்றார். அதற்கு அந்தச் சிறுவன் சொன்னான். ‘இல்லை, நான் அந்த உங்களின் சகோதரனைப் போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’என்றான். எங்கோ படித்ததைப் போல் இந்தக் கதை இருந்தாலும் நாம் தவறவிட்ட சில நல்ல கருத்துக்கள் இக்கதையில் பொதிந்துள்ளன.

ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
(ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும்)
என்ற ”இனியவை நாற்பது” சொற்றொடர் மற்றும் இரெண்டாம் வேற்றுமையும்…

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை…

இன்னும் தொடரும்…

 

 

நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M

(Founder Of PuraAbhiNavam Trust)

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *