திருவண்ணாமலை : நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளராகிய வரலட்சுமியின் மகள் சத்யா என்ற பெண்மணிக்கு B.Sc ., நர்சிங் படிக்க விருப்பமாக இருந்தது என தெரியவருகிறது. ஆனால் நர்சிங் படிக்க போதுமான வசதி வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் திருவேல் டியூசன் சென்டர் நடத்தி வரும் அ. திருவேல் மற்றும் நீலகண்டன் என்பவர்களின் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவித்து, அதை அறிந்து அந்த மாணவிக்கு சிறப்பு ஏற்பாடாக அருணை நர்சிங் கல்லூரியில் படிக்க இடம் வாங்கித் தந்து அதற்கான scholarship முதல் கட்டமாக 10000/=க்கான காசோலையையும் வழங்கினார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.கந்தசாமி அவர்கள். தீடிரென அப்பெண்மணி பணிபுரியும் இடத்திற்கே சென்று அதற்கான கடிதத்தை நேரில் வழங்கி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
மேலும் அங்கு வந்த ஒரு சிறுமி தன்னுடைய நோட்டை நீட்டி ஆட்டோகிராப் கேட்டதும் சந்தோஷமாக கையெழுத்து போட்டு கொடுத்து, அங்கிருந்த சாதாரண தேனீர் கடையில் அமர்ந்து அனைவருடனும் சேர்ந்து தேனீர் அருந்தி விடைபெற்றுச் சென்றார்.
Leave a Reply