கேள்வி – பதில் : ஒரு ஆசிரியராக நான் பல விதங்களில் முயற்சி செய்கிறேன். ஆனாலும் என் மாணவர்களிடம் பெரிதாக பலன் ஏற்படுவதில்லையே, ஏன்?
கேள்வி : ஒரு ஆசிரியராக நான் பலவிதங்களில் முயற்சி செய்கிறேன். ஆனாலும் என் மாணவர்களிடம் பெரிதாக பலன் ஏற்படுவதில்லையே, ஏன்?
- எஸ்.அனிதா, ஆசிரியர்
பதில் : பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்களே தவிர அவர்கள் கற்றுக்கொள்கிறார்களா என்று பார்ப்பதில்லை. அதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறோமா என்று யோசிப்பதில்லை.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
தன் கருத்தை அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் அக்கறை எடுத்துக் கொள்கிறோமா என்று நடைமுறைப் படுத்துவதில்லை. மாணவர்கள் நீங்கள் கற்றுக்கொடுப்பதைக் கற்றுக்கொள்வதற்கு எது முக்கியம் என்று சிந்தியுங்கள்.
முதலில் அவர்களின் மனதிற்கு உங்களைப் பிடிக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்? ஒரு ஆசிரியராக உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும். எது தகுதி? அவர்களின் வயது, மனநிலையை நீங்கள் கண்டிப்பாக உணரவேண்டும். அதன் விளைவாக நீங்கள் உடையுடுத்தும் முறை, உங்கள் பேச்சில் நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துகள், மாணவர்களிடம் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தும் செயல்முறை, மற்றவர்களிடம் நீங்கள் பழகும் பாங்கு, உங்களுக்குத் தெரிந்ததை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் ஈர்ப்புமுறை, அவர்களின் பெற்றோரிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் ஆகியவற்றில் ஒரு பக்குவத்தை கொண்டுவரவேண்டும்.
அப்போது நீங்கள் எதை மாணவர்களிடம் எதிர்பார்க்கிறீர்களோ அவ்வகையானப் பலன்கள் ஏற்பாடும் வாய்ப்பு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பதை அவர்களிடம் கொண்டுசேர்க்கும் யுக்தி உங்களுக்குப் புரியும். ஆகையால் மாற்றவேண்டிய விஷயங்கள் உங்களிடம்தானே (ஆசிரியர்களிடம்தானே) தவிர மாணவர்களிடம் இல்லை.
கேள்வி – பதில் தொடரும்…
………………………………………………..
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
திருமிகு.ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply