இளைஞர்களின் கையில் வளமான இந்தியா !
இளைஞர்களின் கையில் வளமான இந்தியா…!
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் அடைந்த நிலையில் அதன் பெருமைமிகு வரலாற்று நிகழ்வுகள் குறித்து அறிவது மிக மிக அவசியம்.
நாம் மண்ணில் சுதந்திர சுவாசக்காற்றை பெறுவதற்கு முக்கிய காரணம், தேசத்தின் நலனிற்கு தனது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் அர்ப்பணிப்பு. சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான வேள்வியில் உருவான சுதந்திரத்தினை நாம் போற்றி வணங்கி, தியாகிகளின் கனவுகளை மெய்ப்பிப்பது காலத்தின் அவசியம். அதுவே நமது கடமையாகும்.
இந்தியாவின் மக்கள் கலாச்சாரம், மொழி, இனம், மதம், மாநிலம் ஆகியவற்றால் வேறுபட்டாலும் “இந்தியன்” என்ற உணர்வோடு இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் செயல்பாடுகளில் பங்களிப்பு மிகமிக இன்றியமையாததாகும்.
75வது சுதந்திர தினம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைக்குரிய நாளாகும், இந்த இனிய தருணத்தில் அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் நாளாக, அறிவியல் வளர்ச்சி அடைந்த நிலையில் கொண்டாடும் நாளாக, மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை, தீண்டாமை, சமூக நீதி நாளாக திகழுகிறது என்றால் அது மிகையாகாது.
இன்றைய சிற்பிகள். குறிப்பாக இந்தியா மிகுந்த இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் உள்ளடக்கியது. இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் இளைஞர்களே! திறமையை மேம்படுத்துங்கள். கல்வியில் முன்னேறுங்கள். நல்ல பண்பு, சீரிய ஒழுக்கம், உழைப்பு, உண்மை, மனிதநேயம், தளராத நம்பிக்கை ஆகியவற்றை மூலதனமாக கொள்ளுங்கள். வெற்றி உங்களை வரவேற்கும்.
தவறான வழிகளில் செல்லாமல், சிந்தித்து, நல்ல விதையே நல்ல விளைச்சலைத் தரும் என்பதை காலத்தால் உணர்ந்து செயல்படுவது அறிவுடமையாகும்.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
என்பதை அறிந்து செயல்பட்டால் வாழ்க்கை ஒளி மயமானதாக அமையும். முயற்சியின் சிறகுகள் அசைந்தால் தான் அகன்ற வானம் உங்கள் கைகளில் அகப்படும். தன்னைத்தானே அறிவது அறிவு.
எந்த ஒரு நிலையிலும் உங்களின் வளர்ச்சிக்கு வாழ்க்கை சூழ்நிலை தடையாக இல்லாமல், அறிவியல் தொழில்நுட்பம் மேம்பட்ட நிலையில், தனது திறமைகளை வளர்த்து, வாய்ப்புகளை உருவாக்கி வளர்ந்து வரும் இந்தியாவிற்கு பெருமை சேருங்கள். அதுவே வலிமையான இந்தியாவை உலக அரங்கில் பிரதிபலிக்கும்.
அறிவார்ந்த அறம் சார்ந்த கல்வி ஒவ்வொரு இளைஞனும் பெற்று தளராத நம்பிக்கையோடு செயல்பட்டு, வளமான இந்தியாவிற்கு மேலும் புகழ் சேர்ப்போம்!
முனைவர்.இ.கே.தி.சிவகுமார், எம்.எஸ்சி., பி.எட்.பி.ஜி.டி.சி.எஸ்., பிஎச்.டி.,
(சிறந்த நூலாசிரியர் விருது பெற்றவர்) கைப்பேசி : 9841435126
Leave a Reply