ஆளும் கட்சியில் இருந்தால்தான் நல்லது செய்ய முடியுமா?

மக்கள் வாக்களித்து தேர்வு செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியில் இணைந்தார்கள்.
அதற்கு சொல்லிவைத்தது போல நால்வரும் சொன்ன காரணம்: ஆளும் கட்சியில் இருந்தால்தான் தங்கள் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும்.
எனில் எதிர்க் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியில் இல்லாத உறுப்பினர்கள் எல்லோரும் ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியில் சேர்ந்துவிட வேண்டுமா?
மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் நலன்களுக்காக செயல்படும் திட்டங்கள் எல்லாம் ஆளும் கட்சி வென்ற தொகுதிகளில் இருப்பவர்களுக்கு மட்டும் என்று அரசாணை போட இயலுமா?
அரசுக்கு வருமானமும், வேலை வாய்ப்பும் தரும் ஒரு பெரிய தொழிற்சாலை ஆளும் கட்சி வெற்றிபெறாத ஒரு தொகுதியில் துவங்க திட்டம் வந்தால் வேண்டாம் என்று மறுத்துவிடுவார்களா?
சொல்லப் போனால்.. ஆளுங்கட்சி வெற்றி பெறாத தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினால்தான் அடுத்த முறை அங்கே வெல்ல முடியும் என்கிற நோக்கில்தான் அரசு செயல்படும்.
இன்று மேலும் இரண்டு பேர் தவெகவில் இணைகிறார்கள்…
தவெகவில் இணையப்போகும் அதிமுக Ex-Ministers அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்சி சம்பத் இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளனர்.
– பட்டுக்கோட்டை பிரபாகர்












Leave a Reply