ஒரு 6 மாத காலம் புதிய அரசுக்கு அவகாசம் தரக்கூடாதா?

Share Button

தவெக அமைச்சரவையில்…

2 பிராமணர்கள்…
3 கூட்டணிக் கட்சிகள்…
4 பெண்கள்…
8 பட்டியலினத்தவர்…
9 பேர் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்..!

திமுக, அதிமுக இல்லாத ஒரு ஆட்சி,
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டதால் உருவான
உடனடி நன்மைகள், இவை..!

தேர்தல் முடிவுகள் வெளியாகி, இன்னும் 20 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள், விமர்சன அம்புகளை வீச வேண்டாம்.

59 ஆண்டுகள், இரண்டே “மாடல்” அரசாங்கங்களின் விளையாட்டில் சலித்துப் போய், மாற்றத்துக்காகக் காத்திருந்தோமே.

ஒரு 6 மாத காலம், புதிய அரசுக்கு, அவகாசம் தரக்கூடாதா..? பதில் சொல்வதிலேயே காலம் கடத்தாமல், சரி செய்வதில் புதிய அரசின் கவனம் குவிய, அனுமதிப்போம்.

இவர்களை, “மீட்பர்கள்” என்று நானும் சொல்லவில்லை. நல்லவை வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

நடக்கவில்லையென்றால், மக்கள் திரட்சிக்கு, மறுபடியும் வித்திடுவோம்..! மூன்றாமவருக்குக் கொடுத்துள்ள நம்பிக்கையை, நான்காம் நபருக்கும் கொடுக்க முடியும் அல்லவா?

முருகபாரதி

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *