”மரம் நண்பர்கள்” – மரங்களை நட்டு இயற்கையை காப்போம் : சமூகப் போராளியாக பயணம் தொடரும்
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் இயங்கி வரும் ”மரம் நண்பர்கள்” குழு மரங்களை நட்டு இயற்கையை காப்போம் என்ற உறுதியோடு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்கள். மரம் நண்பர்களின் 75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நட்டு வளர்க்கும் திட்டத்தின் இரண்டாம் நிகழ்வாக இன்று 17.8.2021 மா.மன்னர் கல்லூரி விளையாட்டு மைதான வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் G. எட்வின், பேரா.சா.விஸ்வநாதன், செயலர் பழனியப்பா கண்ணன் உறுப்பினர்கள் கல்யாணிகவரிங் ஆறுமுகம், மொபைல் ராஜு, பிரகாஷ், பொறியாளர் ரியாஷ்கான், அசோக் குமார் மற்றும் மருத்துவர் தர்மபாலன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
75வது இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, புதுக்கோட்டை மரம் நண்பர்கள் 7500 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டத்தை 15.8.2021 அன்று புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தொடங்கி வைத்தனர். இந்தத் திட்டத்தை கல்லூரி முதல்வர் முனைவர் பா.புவனேஸ்வரி தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் ஜி.எட்வின், பேரா.சா.விஸ்வநாதன் செயலர் பழனியப்பா கண்ணன், இணைச்செயலர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, உறுப்பினர்கள் சக்தி கணேஷ் முத்தையா, சுப்பிரமணியன், திருமதி சுமித்ரா, மொபைல் ராஜு, பிரகாஷ், தினேஷ், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். முதல்கட்டமாக 75 வது இந்திய சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் 75 மரக்கன்றுகளை நடவு செய்து முதல் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.