தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் இன்று அதிகாலை காலமானார்

Share Button
ஐதராபாத் : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 78. தனது தாயார் குறித்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு, நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.