விருதுகள் தரப்பட வேண்டுமேயின்றி பெறப்படுவதாக இருக்கக் கூடாது
அரசின் விருதுகள் குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவரும் , உலக அளவில் போற்றப்படும் திரையுலக கலைஞருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்துகள் வரவேற்புக்குரியவை.
தகுதியுடையவர்களைத் தேடி கண்டறிந்து அந்தந்தத் துறை வல்லுநர்களால் (அரசியல் சாராத) தேர்வு செய்து , அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே விழா வெடுத்து சிறப்பிக்க வேண்டும் என்கிற கருத்தை மனதார ஆமோதிக்கிறேன்.
தன்னைப் பற்றி தானே சொல்லிக் கொண்டு அதற்கான சான்றுகளையும் இணைத்து பலரின் சிபாரிசு கடிதங்களைப் பெற்று எல்லாவற்றையும் இணைத்து விண்ணப்பிப்பது கலைஞனின் பெருமைக்கும் தன்மானத்துக்கும் , ஆளுமைக்கும் உகந்ததல்ல என்ற கமல்ஹாசனின் கருத்து சரியான நெத்தியடிக் கருத்து.
கமல் அவர்களின் குரலுக்கு வலு சேர்க்க வேண்டியது தன்மானமுள்ள ஒவ்வொரு படைப்பாளியின் கடமையாகும். விருதுகளும் பட்டங்களும் தேடி வருவதே பெருமை.
அந்தப் பெருமை தகுதியுடைவர்களுக்கு தக்க சமயத்தில் தானாக கிடைக்க வேண்டும் என்று உரத்து குரலெழுப்பியுள்ள உலக நாயகன் கமலுக்குப் பாராட்டுகள்.
– உரத்த சிந்தனை உதயம் ராம்
Leave a Reply