ஒருங்கிணைந்த கலை மற்றும் யோகாசன போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாச்சுரல் யோகா அசோசியேசன் சார்பாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மூன்றாவது மாநில அளவிலான ஒருங்கிணைந்த கலை மற்றும் யோகாசன போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிருட்டினகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். S. பிரபாகர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்த கலை மற்றும் யோகா போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு பள்ளிகள் சார்பில் சுமார் 1100 ம் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் கலந்து கொண்ட கிருட்டினகிரி வேளாங்கன்னி பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும், வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், வேளாங்கன்னி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நான்காம் இடத்தையும் பெற்றனர்.
போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள், தொழிலதிபர் உதயகுமார் அவர்கள் பாரத் பள்ளி நிறுவனர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Leave a Reply