தமிழகத்தில் வேறு எந்த தொகுதிகளிலும் இல்லாத வகையில் எதிர் அணிகளில் அண்ணன் – தம்பி போட்டி

Share Button
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. – தி.மு.க. சார்பில் அண்ணன்-தம்பி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக லோகிராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். 1987-ம் ஆண்டு முதல் கட்சியில் பணியாற்றி வரும் அவர் கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், யூனியன் தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட மகாராஜன், லோகி ராஜனின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மகாராஜன் கடந்த 1973-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். ஆண்டிப்பட்டி யூனியன் பெருந்தலைவராகவும் இருந்துள்ளார்.
தமிழகத்தில் வேறு எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் ஆண்டிபட்டியில் எதிர்எதிர் அணிகளில் அண்ணன், தம்பி மோதுவது குறிப்பிடத்தக்கது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *