மாற்றுத்திறனாளிகளுக்கு ஹைட்ராலிக் பேருந்துகள் மதுரை எம்.பி.யிடம் வழிகாட்டி மணிகண்டன் கோரிக்கை!
மதுரை :-
மாற்றுத்திறனாளிகளுக்கு ஹைட்ராலிக் பேருந்துகள் – மதுரை எம்.பி யிடம் வழிகாட்டி மணிகண்டன் கோரிக்கை :-
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், M.P அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஹைட்ராலிக் மேல் தூக்கி உள்ளிட்ட நவீன வடிவமைப்பு வசதிகள் கொண்ட பேருந்துகளை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கிட வேண்டும் என்று வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனு வழங்கினார்.
கோரிக்கை மனுவை முழுமையாக படித்ததோடு கூடுதல் விளக்கங்களை கேட்டு இது குறித்து அவசியம் பரிசீலிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட முகாம்களை நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்துவதற்கு அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பாராட்டு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் உதவும் உள்ளம் பெரியதுரை மற்றும் சமூக ஆர்வலர் ரமேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Leave a Reply