கிருஷ்ணகிரி அருகே 112 ஆண்டுகள் பழமையான பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு

Share Button
கிருஷ்ணகிரி அருகே 112 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின் போது புதியதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் புதிய மாணவர் சேர்க்கை விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர் திருமதி வேதா தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவின் போது பர்கூர் வட்டார கல்வி அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த விழாவின் போது புதியதாக பள்ளியில் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளை கல்வி அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு தேவையான பள்ளிச் சீருடைகள், புத்தகம் உள்ளிட்ட வகைகளை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் ஆண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
இதன் பின் பள்ளி குழந்தைகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும், பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆண்டு விழாவின் போது பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட கிராம மக்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு மாணவிகளின் கலை நிகழ்சிகளை கண்டு களித்தனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *