கிருஷ்ணகிரி மாவட்டம், சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு எஸ்.ஹரீஷ் என்ற மாணவன் 50 விதமான யோகா கலைகளை செய்து சாதனை புரிந்துள்ளான்.
அம்மாணவனைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் பொன்னாடை போர்த்தி பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
மேலும் மாணவனின் மேல்நிலைக் கல்வி வரையிலான கல்விச் செலவினை தான் ஏற்றுக் கொள்வதாக ஆசிரியர் கணேசன் அவர்கள் அறிவித்துள்ளார்.
சீனிவாசபுரம் தலைமை ஆசிரியர் எச்.பௌலின்புளேரா, ஆசிரியர்கள் ஜி.செல்வக்குமார், சிங்காரப்பேட்டை ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் சாதனை புரிந்த ஷரீஷ் என்ற மாணவனையும், மாணவனின் கல்வி செலவை ஏற்ற ஆசிரியர் கணேசனையும் பாராட்டினார்கள்.












Leave a Reply