பொள்ளாச்சி பலாத்கார வழக்கு : தலைவர்கள் கண்டனம், பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு : தலைவர்கள் கண்டனம். பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்ணினம் கசக்கப்படுவதையும் நசுக்கப்படுவதையும், துளியும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும். சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சிறப்பு புலனாய்வு வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் .
Leave a Reply