தந்தை பெரியார் 45-ஆம் ஆண்டு நினைவு நாள், கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், பெரியார் சிலைக்கு 24/12/2018 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தருமபுரி மண்டலச் செயலாளர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் தா.திருப்பதி, தா சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன், ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட கழக அமைப்பாளர் தி.கதிரவன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் செ.ப.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.புகழேந்தி, பெரியார் பெருந்தொண்டர் (ஓய்வு) தலைமையாசிரியர் செயராமன், மாவட்ட ப.க. ஆசிரியரணி ஈ.லூயி சுராஜ், காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக அமைப்பாளர் பெ.செல்வம், ஒன்றிய செயலாளர் சிவ.மனோகர், திராவிடர் விடுதலை கழக தி.குமார், ஒன்றிய துணைச் செயலாளர் . சி.இராசா, கிருட்டினகிரி நகரச் செயலாளர் கோ.தங்கராசன், பெரியார் பிஞ்சுகள் செ.கலையரசி, சி.கார்த்திக் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Leave a Reply