ஆரம்பமானது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா

Share Button

புதுவரவு கிரிக்கெட் :-

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று (17/10/2021) தொடங்கியது.

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய டி20 உலகக்கோப்பை போட்டியில், தரவரிசை பட்டியலில் உள்ள 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும். மீதமுள்ள 4 இடங்களுக்கு 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தேர்வு செய்யப்படும்.

இதில் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளது.

சூப்பர் 12 அணிகள்

தரவரிசை பட்டியலில் 8 இடங்களை பிடித்த அணிகளின் முறையே குரூப்-1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென், ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ். குரூப் 2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான். சூப்பர் 12 சுற்றில் தகுதி பெரும் அணிகளும் தகுதி பெற்ற அணிகளும் ஒவ்வொரு அணிகளுடனும் தலா ஒரு முறை மோத வேண்டும்.

2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் டி20 உலக கோப்பையில் விளையாடுகிறது 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை பொருத்தவரை டோனி ஓய்வு பெற்ற நிலையில் ஆலோசகராக செயல்பட உள்ளார்.

பேட்டிங்கில் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, சூரியகுமார், இஷான் கிஷன், ஆகியோரும் பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாகூர், ஜடேஜா, அஸ்வின், வரன் சக்கரவர்த்தி ஆகியோரும் ஆடும் டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.

12 கோடி ரூபாய் பரிசு

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 12 கோடியும், இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு 6 கோடி பரிசு தொகை அறிவிக்கபட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பையில் இன்றைய போட்டியில் வென்ற அணிகள்

சூப்பர் 12 இடத்திற்கான தகுதி சுற்று போட்டியில் இன்று (17/10/2021) ஓமன் அணி பப்புவா நியூ கினியா அணியுடன் மோதியது இதில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்து வீச முடிவு செய்தது.

பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி விக்கெட் ழப்பின்றி 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

மற்றொரு போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

 

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *