வாக்களிக்க தேர்தல் ஆணையம் தரும் பூத் ஸ்லிப் மட்டும் போதாது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் காட்ட வேண்டும் என்றார். நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன என்ற அவர் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கூறினார்.
வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும் என்றும், 10 லட்சம் காவல்நிலையங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும் என்று கூறிய அவர், வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும் எனத் தெரிவித்தார்.
சொத்து விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எனவும், பொதுமக்கள் புகார் அளிக்கும் விதமாக இலவச மொபைல் ஆப் அறிமுகப்படுத்தும் என்றும் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப்-மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் வாக்குபதிவு சம்பந்தமான புகார்களை அளிக்க 24 மணி நேரமும் இலவசமாக தொடர்பு கொள்ளும் எண்கள் அறிமுகப்படுத்தபடும் எனவும் கூறினார்.
Leave a Reply