திமுக-வின் தேர்தல் அறிக்கை வெளியீடு

Share Button
தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட , தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.
விவசாயத்திற்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மத்திய நிதி மாநிலங்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
மத்திய நிதிக்குழு முடிவுகள் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் தொழில் துவங்க ரூ.50,000 வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு ரயில்களில் இலவச பயணசலுகை.
கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும், அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முன்பிருந்தது போல குறைக்கப்படும். சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
1 கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.
பெட்ரோல், டீசல் விலை பழைய முறைப்படியே நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்.
மாணவர்களுக்கான கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.
மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புயலால் பாதிக்கப்படும் இடங்களில் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைத்து தரப்படும்.
சேது சமுத்திர திட்டம் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை.
 பாலியல் குற்றங்களை தடுக்க உரிய சட்டம் கொண்டு வரப்படும்.
பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.
ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
100 நாள் வேலை திட்டத்தின் எண்ணிக்கை 150 நாளாக உயர்த்தி அறிவிக்கப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.
தனிநபர் ஆண்டு வருமானத்தை ரூ.1.50 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *