ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை
சென்னை :-
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் 20.08.2021 இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் காரணத்தினால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகள் வரும் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இன்று 20.08.2021 காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.