ஜோதிநகர் பள்ளியில், பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது

Share Button
கிருட்டினகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் பள்ளியில், பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு குறித்து பல தகவல்களைக் கூறி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று நாடு முழுமையும் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் இந்தியாவிலேயே முழுமையான கல்வியைப் பயின்று,  உலகின் மிக உயரிய நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி. இராமன்,  அவர்களைப் போற்றும் வகையிலும் அவரின் சாதனைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும் இந்திய அரசு 1977 முதல் இந்த விழாவை கொண்டாடி வருவது குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பல்வேறு அறிவியல் சோதனைகளைச் செய்து காட்டினர். அறிவியல் வளர்ச்சியின் அவசியம் குறித்தும் பேசினர்.
118 தனிமங்களின் பெயர்களை அவற்றின் குறியீட்டோடு குறிப்பிட்டு எட்டாம் வகுப்பு மாணவி ச. இனியா பார்க்காமல் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, ந. திலகா, பூ. இராம்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி ச, இனியா அனைவருக்கும் நன்றி கூறினார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *