கடலூர் பேருந்து விபத்து : முதல்வர் இரண்டு லட்சம் நிவாரண உதவி!

Share Button

கடலூர் :-

கடலூர் பேருந்து விபத்து : முதல்வர் இரண்டு லட்சம் நிவாரண உதவி!

கடலூர் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அளிப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 25 ற்கும் மேற்பட்ட பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு விபத்து நடந்தது. தொடர்ந்து காலை 11.30 மணிவரை மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மீட்பு பணிகள் முடிந்த பிறகே, எத்தனை பேர் உயிரிழந்தனர். அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதை சரியாக சொல்ல முடியும் என போலீசார் கூறினார்கள்.

பஸ் விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்

இந்த விபத்து குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் ” இந்த பேருந்து விபத்தான துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்.

மேலும், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்களையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *