காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க : அரசியல் இப்ப வேணாமே  நடிகர் விஜய்!

Share Button

காசு வாங்கிட்டு ஒட்டு போடாதீங்க : அரசியல் இப்ப வேணாமே  நடிகர் விஜய்!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார்.

இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில்  நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளை சட்டையில் வந்த விஜய்யை கண்ட அனைவரும் அரங்கம அதிர கூச்சலிட்டு அவரை வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய விஜய், தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

நடிகர் விஜய்  தற்போது அரசியலிலும் விரைவில் நுழைவார் என்று சில காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் அவரது 70வது படம் முடிந்த பின்பு அவர் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இன்று காலை 7.30 மணி முதல் மாணவர்கள் பெற்றோருடன் விழா நடக்கும் மண்டபத்திற்கு வருகை தரத் தொடங்கினர். விஜய் இந்த விழாவில் 10.30 மணியளவில் கலந்துகொள்வார் என சொல்லியிருந்தார்கள்

இந்நிலையில், 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. அவர்களை சந்தித்து தளபதி விஜய் ஊக்கத்தொகை வழங்கி  உள்ளார்.

இதை விஜய் பேசியபோது “இதுவரை பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். ஆனால் முதல்முறையாக இதுபோன்ற கல்வி நிகழ்ச்சியில் பேசுகிறேன். ஒரு பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல உணருகிறேன்.

நான் பள்ளியில் ஒரு சாதாரண மாணவன் தான். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை பார்க்கும்போது என் பள்ளி காலங்களை நினைவுக்கு வருகிறது.

சமீபத்தில் ஒரு படத்தின் வசனம் என்னை மிகவும் பாதித்தது. ‘காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுங்க, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுங்க, ஆனா படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது’ என்று வசனம் வரும்.

கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாள்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது.” என்றார்

நிகழ்வின் சிறு துளிகள் :

மாநில அளவில் இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பரிசளித்தார் விஜய்

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று பெற்றோரிடம் கூறுங்கள் என்று மாணவர்களிடம் பேசினார்.

அப்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கினார். வைர நெக்லஸை மாணவியின் தாயாரிடம் கொடுத்து, அதனை அணிவிக்க செய்து பார்த்தார்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படிங்க, தெரிஞ்சுக்கங்க என்றார் விஜய்

நீங்க தான் நாளைய வாக்காளர்கள் காசு வாங்கீட்டு ஓட்டு போடாதீர்கள் என மாணவர்களை கேட்டு கொண்டார்.

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் அரசியல் பற்றி சூசகமாக சில விஷயங்களை பேசியுள்ளார்.

கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய் என்னுடைய கனவு எல்லாம் சினிமா நடிப்பு தான் ஒரு வேளை… அதை விடுங்க அது இப்ப எதுக்கு வேணாம் என பேசியது, நடிகர் விஜய் அரசியலுக்கு இப்போது வர போவதில்லை என சூசகமாக அறிவித்ததார்.

தளபதி அரசியலுக்கு வருவார் என கருதி செலவு செய்தது வீணாகப் போச்சே என மன்ற நிர்வாகிகள் சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *