வியக்க வைத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளின் திருமணம்!

Share Button

வியக்க வைத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளின் திருமணம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம், பெங்களூரில் ஜூன் 7 அதமாரு மடத்தின் வேதமுறைப்படி மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மத்திய அமைச்சரின் மகள் திருமணத்தை இவ்வளவு எளிமையாக நடத்தியது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாகவும், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இவரது மகள் வாங்மயி ப்ரகலா என்பவருக்கும் பிரதிக் என்பவருக்கும் பெங்களூரில் உள்ள வீட்டில் மிக நேற்று எளிமையான முறையில் திருமணம் நடை பெற்றது.

பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது மகள் திருமணத்தை ஆடம்பரம் எதுவும் இன்றி எளிமையாக நடத்தியது ஆச்சர்யத்தில் பலரது புருவங்களை உயர்த்தியது எனலாம்.

அதமாரு மடத்தின் வேதமுறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள் மற்றும் ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர்.

மத்திய அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தனது ஒரே மகள் திருமணத்தை மிக எளிமையாக நடத்தியுள்ளது பலரது பாராட்டினையும் ஆச்சர்யத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *