தீவிர பிரசாரம் செய்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும், ராகுல் காந்தி அறிவுறுத்தல்
ராகுல் காந்தி உத்தரவு :-
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் கடுமையாக பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அனைவரும் தேர்தல் களத்தில் நின்று உழைக்க வேண்டும் என ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார். தற்போது கோவா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடத்தி வருகிறது.
தேர்தல் பணிகளை கட்சிகள் தற்போது தொடங்கி விட்டன. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்து நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டு கருத்துக்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் கோவா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். கோவா மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தேர்தல் பார்வையாளர் ப.சிதம்பரம், பொதுச் செயலாளர் கே.வேணுகோபால், கிரீஷ் சோடேங்கர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திகம்பர் காமட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.












Leave a Reply