பிரியாமணி நடிப்பில் உருவாகி உள்ள படம் DR56
திரை விமர்சனம் :-
பிரியா மணியின் Dr56
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியாமணி. நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரியாமணி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘DR56’. ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை கன்னடம் மற்றும் தமிழில் தயாரித்து உள்ளது.
படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்தது, நாயகனாக நடித்து இருக்கிறார் பிரவீன். க்ரைம் திரில்லர் மெடிக்கல் திரில்லர் வகையை சேர்ந்த கதைக்களம்.
அடுத்தடுத்து மூன்று டாக்டர்கள் மர்ம்மான முறையில் கொல்லபடுகிறார்கள் . மர்ம கொலைகாரன் டாக்டர்களின் சடலத்தை தள்ளுவண்டியில் கட்டி நடு ரோட்டில் எறிந்து விட்டு செல்கிறான்.
அந்த கொலைசம்பவங்களை துப்பு துலக்க சிபிஐ ஆபிசரான ப்ரியாமணி நியமிக்கப்படுகிறார். அதே சமயத்தில் கதாநாயகன் வித்தியாசமான நோய் தாக்கத்தால் அவதியுடன் வருகிறார்.
அவர் 56 நிமிடங்களுக்கு ஒரு முறை மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் உயிருக்கே ஆபத்து.
இந்த கொலைக்கான காரணங்களை ப்ரியாமணி துப்பு துலக்க பல திடுக்கிடும் உண்மைகளை அறிந்து கொள்கிறார். தமிழ் சினிமாவில் மெடிக்கல் க்ரைம் மெடிக்கல் மாபியா சம்பந்தபட்ட கதைகள் அதிகம் வந்திருந்தாலும் இந்த கதைக்களம் சற்று வித்தியாசமாகத் தான் இருக்கிறது.
இன்னமும் கொஞ்சம் கதையிலும் காட்சியமைப்பிலும் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான படமாக இருந்திருக்கும். கதை திரைக்கதை காட்சியமைப்புகள் ஆங்காங்கே ஒட்டாமல் சலிப்பினை தருகிறது. நாயகன் ப்ரவீன் நடிப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ப்ரியாமணி வழக்கமான தனது அதிரடி நடிப்பினை சிறப்பாகவே தந்திருக்கிறார். படத்திற்கு இ்ன்னமும் மெனக்கெடல் தேவை.
இத்திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. படம் சுமார் ரகம். நல்ல கதையை இன்னும் சிறப்பாக தந்திருக்கலாம். படத்தினை ஒரு முறை கண்டு ரசிக்கலாம்.
Leave a Reply