தமிழக அளவில் 21 வயதுக்குட்பட்ட முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள் கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கிருட்டினகிரி மாவட்டம், கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பத்தாம் வகுப்பு மாணவன் சூர்யா 50 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தட்சிணாமூர்த்தி 200 மீட்டர் தனி நபர் பிரிவில் இரண்டாம் இடம்,
ஷாகித் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இரண்டாம் இடம்,
சந்துரு 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் மூன்றாம் இடம்,
சதீஷ் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் மூன்றாம் இடம்,
கபில்ராஜ் 200 மீட்டர் பிரிவில் தனிநபர் பிரிவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்கள்.
முதல் பரிசு பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் காசோலையும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு 750 ரூபாய் காசோலையும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு 500 ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களையும் உடன் அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் ரகு சரவணன் அவர்களையும் பள்ளி தலைமையாசிரியர் சாய்குமார் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
Leave a Reply