தஞ்சை மண்ணில் தன்முனைக் கவிதைகள் முதல் கவியரங்கம் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தலைமையில் அரங்கேற்றம்
தஞ்சையில் 26/01/2019 அன்று முள்ளிவாய்க்கால் முற்ற அரங்கில் கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமத்தின் மூன்றாமாண்டு விழாவில் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் தன்முனைக்கவிதைகள் முதல் கவியரங்கம் அரங்கேற்றமானது.
இதில் எட்டுக் கவிஞர்கள் பங்கேற்று நலம் தேடும் நட்பின் சுவடுகள் எனும் தலைப்பில் சிறப்பான நான்குவரி தன்முனைக் கவிதைகள் வழங்கினர்.
நட்பு சமூகநலன் குறித்த சூழலில் வாசித்த இவர்களது கவிதைகளை கைத்தட்டலுடன் ரசித்து மகிழ்ந்தனர். கவியரங்கில் கவிஞர்கள் நிறைமதி நீலமேகம், காதர் பாட்சா, கோவை புதியவன், ஜென்ஸி, சாகுல் ஆதூர், தென்பரை இராக பாஸ்கர், செல்வா ஆறுமுகம் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கவியரங்க அரங்கேற்ற செய்தியை வெளியிட்ட தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
கவிச்சுடர் ஐயா விற்கும்..
தன்முனைக் கவிஞர்களுக்கும்
வாழ்த்துகள்
தன்முனைக் கவிதை பாடியவர்களில் நானுமொருவன்.
தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஆத்தூர் சாகுல்
தன்முனைக் கவிதை பாடியவர்களில் நானுமொருவன்.
தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஆத்தூர் சாகுல்
சிறப்பான அரங்கம்
சிறப்பான வழிகாட்டல் தந்த
அமர்வின் தலைமை…
நன்றிகள் பல
நிகழ்வை பதிவாக்கியமைக்கு..