ஊத்தங்கரையில் மாணவிகளுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை பரிமளம் தலைமைதாங்கினார். ஆண்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.
8-ம் ஆண்டாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சரஸ்வதி பேனா, ப்ரோ சர்கிள், அளவுகோல், கவராயம், பென்சில் உட்பட தேர்வு உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் தனலட்சுமி, சிவகாமி, சங்கீதா, தேவிகா, லட்சுமி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். தேர்வு உபகரணங்களை பெற்ற மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியை சரஸ்வதிக்கு தெரிவித்துக்கொண்டனர்.
Leave a Reply