பெண்களின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் உறுதி அளிக்கும் வகையிலேயே சர்வதேச மகளிர் தினம் : முன்னால் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் பேச்சு

Share Button
பெண்களின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் உறுதி அளிக்கும் வகையிலேயே சர்வதேச மகளிர் தினம் உருவாக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருவதாக  சென்னை உயர் நீதிமன்ற  முன்னால் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் pride of Coimbatore மற்றும் மகளிர் நல அமைப்பு ஆகியவை இணைந்து மகளிர் தின விழா கோவையில் நடைபெற்றது. சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள பப்பீஸ் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக லீமா ரோஸ் மார்ட்டின்,மீனா ஜெயகுமார், அனுஷா ரவி,டெய்ஸிசரண்,ப்ரீத்தி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற முன்னால் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், யங் இண்டியன் அமைப்பின் தலைமை நிர்வாகி விஷ்ணு பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். வீ.டி.குரூப் ஆப் கம்பெனியின் நிறுவனர் வெங்கட் தேவன் ஒருங்கிணைத்த இந்த விழாவில் முன்னதாக  மயூரி நாட்டிய கலை மைய மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதார பெண் ஊழியர்களுக்கு புடவைகள் வழங்குதல், பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளி மகளிருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதி மன்ற முன்னால் நீதிபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பெண்களின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் உறுதி அளிக்கும் வகையில் மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *