டிவி நிகழ்சித் தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் திடீர் மரணம்

Share Button
பிரபல சின்னத்திரை நடிகர் ஆனந்த கண்ணன் இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 48. இவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். பெண் தொகுப்பாளினிகளுக்கு நடுவில் ஆண் தொகுப்பாளர்கள் டிவி நிகழ்ச்சியில் பிரபலமாவதும், தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பதும் கடினமான ஒன்று.
ஆனால் தொகுப்பாளர் ஆனந்த கண்ணனைப் பொறுத்தவரை தனது நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சிரித்த முகத்தோடும் கொண்டு செல்லக் கூடியவர். இந்த புன்னகைக்கு பின்னால் புற்றுநோய் என்ற பெரிய சோகம் மறைந்திருக்கிறது.
புற்றுநோயின் தாக்கத்தால் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் ஆனந்த கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அதிகாலையில் காலமானார் . இவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சன் மியூசிக், SS மியூசிக் என தமிழில் மியூசிக் சேனல்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்தவரான இவர் 2001 முதல் 2011 வரை சென்னையில் தங்கியிருந்து டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். சன் மியூசிக் விஜேவாக இருந்தபோது இவரது தமிழ் உச்சரிப்பும், சிரித்த முகத்துடன் எல்லா நேயர்களையும் வரவேற்கும் தன்மையும் இவரை மிகவும் பிரபலமாக்கியது.
தனக்கென தனி ரசிகர் படையையே கொண்டிருந்த ஆனந்த கண்ணன் பின்னர் சன் டிவியில் இருந்து விலகி ரேடியோக்களில் ஆர்ஜேவாகவும், சில டிவி சேனல்களில் பகுதி நேர விஜேவாகவும் பணியாற்றினார்.
மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர் ஆனந்த கண்ணன். இவரது மனைவி ராணியும் சிங்கப்பூரில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர்.
2011-ல் இருந்து மீண்டும் முழுமையாக சிங்கப்பூருக்குப் போய் குடியேறிய ஆனந்த கண்ணன் சமீபத்தில் Bile Duct Cancer மிகவும் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்தார். Cancer நோயினால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு செய்தி அறிந்து ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.