தமிழக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
தமிழக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு. தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் நீண்ட காலமாக வருவாரென எதிர்ப்பார்க்கப் பட்ட நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அரசியலுக்கு வருவதாக கடந்தாண்டு அறிவித்தார். ஆனால் தமிழகத்தில் முக்கிய பிரச்சினைகளில் அவர் மெளனம் காத்தது பலதரப்பு மக்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இதனிடையே தனது பெயரில் “ரஜினி மக்கள் மன்றம்” என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் அறிவிக்கப் படாத அரசியலை நடத்தி வந்தார். இதனிடையே அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஓராண்டை கடந்த பின்னரும் அவர் கட்சி தொடங்காமல் இருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டது.
வரும் மக்களவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் தமது இலக்கு தமிழக சட்ட சபை தேர்தலே என அறிவித்தார். தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப் பட்டிருந்த நிலையில் இந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என அவர் அறிவித்திருப்பது ரஜினி தொண்டர்களிடையே சோர்வையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
Leave a Reply