திருப்பூர் அனுப்பர்பாளையம் சாலையில் கண்ணைக் கட்டி ரோட்டில் விட்டது போன்று…இந்த டூவிலர் பைக்கில் அமர்ந்து செல்லும் பிள்ளையை சற்று பாருங்களேன்..விதி யாரோடு விளையாடப் போகுதோ..?
அய்யோ பாவம் பார்ப்பவர்களது கண் பதபதைக்க கொஞ்சமும் கூட மனமில்லாத தந்தை பைக்கில் வேகத்தை கூட்ட பைய்யனோ நிலை தடுமாறி திக்..திக்..திக் என்ற விபத்தை நோக்கிய பயணம்.
என்னதான் ஆயிரமாயிரம் விழிப்புணர்வு கொடுத்து வந்தாலும் தன் பிள்ளைகளை கண்டித்து வளர்க்க முயற்சிக்காவிடில் விபத்தை நாமே சந்திக்க நேரிடும் நண்பர்களே தோழிகளே!
ஆபத்தை உணராத தன் பிள்ளைகளுக்கு நல் வழி காட்டி தாய் தந்தை தான் கடவுலென நல்லறிவு புகுத்திட குழந்தைகளோடு அதிக நேரத்தை ஒதுக்கி வாழ்வின் வழிமுறைகளை மேற்கோள் காட்டி பல குழந்தைகளின் குறும்புத்தனத்தை மாற்றி நல்ல பழக்கவழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். ஐந்தில் விலையாதது..ஐம்பதில் வலையப் போவதில்லை! எந்தவொரு வாகனங்களில் சென்றாலும் வாகன விதிமுறைகளை மதித்து நடப்பதே நம் எதிர்காலம் என்றும் நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.
………………………………
ந.தெய்வராஜ், ரிப்போர்ட்டர், திருப்பூர்.
புதுவரவு மாத இதழ்
Leave a Reply