கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள பகல் நேர பராமரிப்பு மையத்தில் படிக்கும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று புத்தாடைகள் வழங்கி பொங்கல் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று புத்தாடைகள், இனிப்பு, பரிசுகள் போன்றன வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சியாக பரிசுகள் மற்றும் புத்தாடைகளை பெற்றுக்கொண்டனர். புத்தாடைகள் உட்பட பல்வேறு பொருட்களை நல்உள்ளம் படைத்தவர்களிடம் பெற்றும், தனது ஊதியத்திலிருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் மாதந்தோரும் வழங்கி வருகிறார்.
ஆசிரியர் கணேசன் அவர்கள் முயற்சியால் பகல்நேர பராமரிப்பு மையம், ஊத்தங்கரை ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
பொறுப்பு மேற்பார்வையாளர் சங்கர், மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம், சிறப்பு ஆசிரியர்கள் சுரேஷ், காமாட்சி, ரமேஷ், பிரபாகரன், வைரியம்மாள், பூங்குழலி, கவிதா மற்றும் மாற்றுத்திறனாளி பெற்றோர்கள் உட்பட பலர் சிறப்பான ஒத்துழைப்பு தருகின்றனர்.
பல்வேறு பரிசுகளை வழங்கி பொங்கல் உட்பட எல்லா பண்டிகைகளும் விழாக்களும் மதசார்பற்று பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுடன் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
Leave a Reply