நீரிழிவும் உடற்பயிற்சியும் ஓர் விழிப்புணர்வு பார்வை
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்தில் புகழ் பெற்று விளங்கிய சரகர், சுஸ்ருதர் என்ற இந்திய வைத்தியர்கள் நீரிழிவு நோய்களை பிரமேகம், மதுமேகம் என்று அவர்கள் இயற்றிய சமஸ்கிருத மொழி நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
பரம்பரைத் தன்னமையும், உடல் பருமனாவதுமே நீரிழிவுக்கு முக்கிய காரணங்கள் என்றும், நீரிழிவு உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக கோளாறைக் குணப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நீரிழிவு உள்ளவர்கள் நடந்து கொண்டிருக்கும் போதே உட்கார்ந்து கொள்ள ஆசைப்படுவார்கள். உட்கார்ந்து விட்டால் படுத்து கொள்ள ஆசைப்படுவார்கள் என்றும், படுத்து கொண்டிருந்தால் தூங்கி விட ஆசைப்படுவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நீரிழிவு நோயாளிகளை சோம்பலுக்கு இடம் கொடுப்பவர்கள் என்றோ அல்லது நீரிழிவே அவர்களைச் சோம்பேறிகளாக்கி விடுகிறது என்றோ கருதியுள்ளனர்.
நீரிழிவு நோயினால் இறந்து போனவரின் கணையம் அழிந்து போயிருப்பதை கண்டு, அந்த உறுப்பு தான் நீரிழிவு நோய்க்கு சம்பந்தப்பட்டது என்று கூறியவர் ஆங்கிலேய மருத்துவர் காலே(cawley).
கல்லீரலில் குளுகோஸ் அதிகமாக உற்பத்தி அதிகமாவதே நீரிழிவு நோய்க்கு காரணம் என்று கூறியவர் திரு. ஜார்ஜ் பெர்ணாட். இவர் தான் சர்க்கரைப் பொருள் ஜீரணமாவதைக் குறித்து பல உண்மைகளை ஆராய்ந்து கூறியவர்.
நீரிழிவு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி மிக முக்கியம் எனவும், அதிலும் மெல்லோட்டம் அல்லது விரைவான ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகள் நீரிழிவு நீங்க அதிகமாக உதவும் என கூறியிருக்கிறார்கள் மருத்துவ மேதைகள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உடற்பயிற்சி அவசியம் என்றும் உடற்பயிற்சி செய்யச் செய்ய சிறுநீர் கழிவதில் இனிப்பு வெகுவாக குறைந்து விடும் என்றும் கருதப்பட்டதால் தான் உடற்பயிற்சி கட்டாய சிகிச்சை முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆக இன்சுலின் போட்டுக் கொண்டு இனிப்பு மற்றும் குளிர்பானங்கள், பத்து காபி, டீ குடிப்பவர்களாகட்டும், சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி, யுனானி மருந்துகள் சாப்பிட்டு வயிறு முட்ட உணவை உண்பவர்களாகளின் கவனத்திற்கு…
இந்த உயிரை சுமக்கும் உடலை காப்பாற்ற வேண்டியாவது காலை, மாலை (நேரம் இல்லை என்று சொல்பவர்கள் மாற்று பாதையில் செல்லவும்) கட்டாயம் அரை மணி நேரம் வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
இதை ஒரு சேலன்ஜ்ஜாக (பத்து வருட போட்டோ சேலன்ஜ் போல) நீரிழிவு உள்ளவர்கள் வேகமான நடைப்பயிற்சி அல்லது மெல்லோட்டம் (ஜாகிங்) செய்து சுகர் அளவு ஒரு மாதத்தில் எவ்வளவு குறைந்தது என்று எனக்கு டேக் போட்டு சொல்லுங்கள்.
நலம் வாழ,
ஈஸ்வரி
Leave a Reply