பாரதி கண்ட புதுமைப் பெண் போல இவரது தன்னலமற்ற சேவையும், அசாத்தியமான துணிச்சல்மிக்க ஒரு புதுமைப் பெண்மணியுமான அக்ரி.சாந்தி அவர்களை சென்னை, மணலி பகுதியில் சந்திக்க நேரிட்டதன் விளைவாக எங்கள் புதுவரவு நேர்காணல் தொகுப்புக்கு அவரை சந்தித்தோம். இவரது நெடுந்தூரப் பயணத்தை கேட்டறிய தொடங்கினோம்…
சாந்தியோட அப்பா அண்ணாதுரை மணலி பகுதியில் மிகவும் பெருமை வாய்ந்த மனிதராகவும் அன்றைய காலகட்டத்தில் இவர் அப்பகுதியில் தலைவர் பொறுப்பில் இருந்து வந்ததாகவும் அதோடு இவர்களுக்கென நல்ல நம்பிக்கையும், உற்சாகம் ஊட்டக்கூடியவராய் அவருடைய தாய் பஞ்சவர்ணம் மற்றும் உடன் தம்பியும்தான் குடும்ப உறவுகளின் பொக்கிஷம். இவர்கள்தான் என் வாழ்வில் ஊன்றுகோலாக வித்திட்டவர்கள் என்று பெருமிதத்தோடு கூறுகிறார்.
என் தந்தையின் கனவு என்னை ஒரு விவசாயம் சார்ந்து படிக்க வேண்டுமென (அக்ரி) தான் உன் வாழ்க்கையில் பலரது வாழ்வில் வழி காட்டியாய் நீ உருவெடுக்க முடியும் என்று ஆறுதல் கூறிய தந்தையின் கனவில் நீந்தி வந்த சாந்தி என்பவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் 1994 ல் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் B.sc.Agri., படிப்பை தொடங்கி 1998 ல் படிப்பையும் முடித்துள்ளேன் என்றார்.
அதன் பிறகே இயற்கை சார்ந்த பணிகளை செய்ய அதீத கவனம் எடுத்து மணலி எனது ஊர்களில் சிறு சிறு உதவியாக விதைப் பந்து விதையாக உருவாக்கவும், மரக்கன்று நடுவதுமாகவும் எனது ஆர்வம் இயற்கை சார்ந்து நீண்டு கொண்டே போனதுங்க..
இப்படியே என் பணிகள் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு போனது இதோடு என் திருமண நாளையும் 2005ல் தொடங்கி வைத்திட..இதில் என் கணவர் சிவக்குமார் இன்சினிரிங் ஆவார் இவர் திருமணத்திற்கு முன்பும் சரி..திருமணத்திற்கு பிறகும் சரி என் கணவரின் தொழில் சம்மந்தமான முறையில் வெளிநாடு சுற்றுப் பயண வாழ்க்கை தான் அவருக்கு அதிகம் இதில் நானும் அவருடைய வெளிநாடு வாழ்க்கை பயணத்தில் 2 ஆண்டு காலம் பயணித்தேன்.
இதில் பல அனுபவங்களை கற்றுக் கொண்டேன் என் ஓட்டம் அனைத்துமே இந்த சமூகத்திற்கு ஏதாவது முன் மாதிரியாக திகழ வேண்டுமென்ற எண்ணம் தான் எனக்குள் ஓடியது அதன் ஒரு பகுதியாகத் தான் இன்றும் சமூக பாதையில் பயணிக்கின்றேன் என்றார் சாந்தி..
இதற்கிடையில் எனக்கு மூத்த மகளான மோகனப் பிரியாவும், இளைய மகன் ஜீவன் குமார் ஆகியோர் எனக்கு பிறந்த பொக்கிசமாகவும் நான் கருதியதும் கூட.. இதில் பல சூழலில் நான் கஷ்டப்படும் போதெல்லாம் எனக்கு உறுதுணையாய் கூடவே இருந்து என்னையும் என் குழந்தைகளுக்கும் பக்க பலமாய் என் தாயும் தந்தையுமே பாதுகாப்பாய் இருந்துள்ளாங்க என்பதை மனதறிந்து சொல்வேன் என்றார் சாந்தி..
இப்படி பல வழிகளில் தன் வாழ்க்கைப் பயணம் ஒரு பக்கம் இருக்க.. மற்றொரு பக்கம் சமூக அக்கரையுடையவராக பல பசுமை வழிகளில் பயணிப்பதையும் மேலும் மேலும் சந்திக்க தொடங்கினார்..
இதில் எதிர்பாராத விதமாக திருமணம் முடிந்து வெளிநாடு பயணம் எல்லாம் முடித்து தமிழ் நாடு திரும்பிய போது சாந்தி என்பவர் சிக்கன் குனியா காய்ச்சலால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி கை கால் ஜாயின்ட் வலியால் துடிதுடித்து சிரமப்பட்ட அந்த தருணத்திலும் சாந்தி 6 மாத நிறைமாத கர்பிணி. இதில் மருத்துவ சிகிச்சை ஏதும் அளிக்க முடியாத நிலையிலும் இந்த நிலையில் தன் வயிற்றில் உள்ள குழந்தையின் நிலைபற்றியும் மருத்துவர்கள் எந்த விபரமும் கூற முடியாது என சொன்ன போதிலும் கூட நான் மனம் தளராமல் வந்த சிக்கன் குனியா நோயில் இருந்து கூட அவ்வளவு எளிதில் குணமடைய வில்லைங்க.. அதில் 7 வருடமாக தொடர் போராட்ட வலியில் துடித்ததும் உண்டு என்றார் பெரும் மனகுமரளாய் சாந்தி..
இதில் இதைவிட வருத்தமான நிலை என்னவென்றால் எனக்கு பக்க பலமாக உள்ள தந்தை உடல் நலக் குறைவால் 2010ல் இறந்து விட்டார்.
அதன் பின் அம்மாவின் ஆதரவும் தம்பியின் அறவனைப்பின் பிடியில் என் வாழ்க்கைப் பயணம் தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு வகையில் என் உடலும் வலுமை பெற்று இயல்பு வாழ்வில் இனிமையான பயணம் தொடர்வதற்கு ஆயத்தமானேன்.
திடீரென தன் மனதில் தோன்றியதைப் போன்று தன் பிள்ளைகளோடும் பிரன்சிப்களோடும் விளையாட்டு பூங்காவில் விளையாடி மகிழ்வித்த போது விதைப் பந்தின் விழிப்புணர்வு பற்றி கலந்துரையாடிட ஓர் வாய்ப்பு கிடைத்தது உடனடியாக அந்த இடத்தில் பலரும் கூட்டு சேர்ந்து 100 நபர்கள் வீதம் தலையிட்டு 1மணி நேரத்திற்குள் களி மண், செம்மண்,உரம் சார்ந்த பொருளைக் கொண்டு அவரவர் விதைப் பந்து தயார் செய்ய தொடங்கி 5000 விதைப் பந்து செய்து முடித்து விட்டனராம்…இந்த விதைப் பந்து விதையை பல இடங்களில் நேரில் சென்று விதைக்கப்பட்டதாலும் , பலருக்கு கொடுத்தும் தூவியுள்ளோம் என்றார்…
இது போன்று ஏரி கரைகளில் பனைவிதை பலமடங்கு நட்டும் இயற்கை வலம் காத்து வருகிறோம்..
இதில் தன்னார்வத்தோடு வார வாரம் மக்கள் பாதை அமைப்போடு இனைந்து 1 ஆண்டு காலம் மரக்கன்றுகள் நடுவதற்காகவும், பிளாஸ்டிக் ஒழிப்பின் பணிக்காகவும் ஈடுபட்டுள்ளோம்.
நடைபாதை நண்பர்கள் குழுவினர்களுடன் எங்கள் இயற்கை வழி அறக்கட்டளை அமைப்பு கடந்த 3ஆண்டுகள் பயணித்து இருக்கோம்…
இப்படி எங்களது இயற்கை வழி அறக்கட்டளை பணி தொடர்ந்து நீடித்துக் கொண்டு போக.. நம் பணி இவ்வளவு சிறப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் எங்கள் அமைப்பின் மூலம் கூட்டத் தொடர் ஒன்றை கூட்டி சில முக்கிய தீர்மானங்கள் பற்றி பேச முடிவு செய்தோம் அதில் முதல் முறையாக தீர்மாணிக்கப்பட்ட விஷயம் என்னவென்றால் நம் மணலியில் உள்ள ஏரியை நாம் தூறு வாரனும் என முடிவு செய்து இத்துறை சார்ந்து அனுமதி கேட்டோம்.
இதில் ஏரியின் துறைசார்ந்த அதிகாரிகள் கூறியதாவது தங்களுடைய அமைப்பு பதிவு செய்யப் பட்ட அமைப்பா இருந்தால் மட்டுமே தான் எங்கள் துறை சார்ந்து நீங்க பணி செய்ய அனுமதி தர முடியும் என்றார்கள் அப்படியா என்று அதன் பின் எங்களது இயற்க்கை வழி அறக்கட்டளை என மே மாதம் 13 ம் தேதி 2018ல் பதிவு செய்யப்பட்டும் அதன் பின்னர் எங்களது இயற்க்கை வழி அறக்கட்டளை மூலம் ஏரி தூர் வார அனுமதி பெற்றோம்.
இதில் இதற்கு முன் பல சமூக அமைப்புகள், பல கட்சி அமைப்புகள் என பலரும் இந்த ஏரியை தூர்வார முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு கிடந்த ஏரியை எங்களின் அனுகு முறையால் தங்களால் முடிந்த அவரவர் சிறு சிறு நிதியை திரட்டி சுமார் 1லட்சம் நிதியில் ஜேசிபி வாகனம் கொண்டு எங்கள் மணலி ஏரியை தூர் வாரிய பெருமை எம் மக்களுக்கும் தெரியவரும் என்றார் சாந்தி…
இதில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் என்னவென்று நம் புதுவரவு தொடர் நேர்காணலின் போது சாந்தி ஆனந்த கண்ணீரோடு சொல்கிறார் இந்த ஏரியை தூர்வார அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டு விடிந்தா அதிகாலை எங்கள் அமைப்பின் குழுவினர்கள், பகுதி பொதுமக்கள், இன்னும் பல அமைப்புகளும் ஜேசிபி வண்டியுடன் ஏரியின் உள்ளே தூர்வார திரண்டு நிற்கிறார்கள் அப்படியுள்ள நேரத்தில் என் தாய் பஞ்சவர்ணத்திற்கு திடிரென உடல் நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிதாயிற்று எனக்கு என்ன செய்வதென்றே புரியலை? ஒருபுரம் என் தாயின் உயிர் இன்னொரு புரம் ஏரியின் நீர் நிலையை காப்பாற்றிட வேண்டும் என மனதுக்குள் ஓர் பெரிய சுமை என் மனதில் தடுமாறிட…..
சற்று நான் ஒரு நிமிடம் பொருத்திருந்து நம் சமூகப் பணியையும் நிறுத்திட கூடாதென்று மருத்துவமனையில் என் தாயின் சிகிச்சைப் பிரிவில் நானும்…ஏரியின் துரிதப் பணிக்கு எனது கணவர் சிவக்குமாரையும் நியமித்தும் அன்று ஏரியையும் தூர் வார முனைப்பு காட்டி வெற்றி கொண்டோம். என் தாயும் சிகச்சையில் முன்னேற்றம் பெற்றார் இதுவே என் பணியில் சந்தித்த சவால்கள் என்றும் நான் உரத்த குரல் கொடுப்பேன் என்றும் எங்கள் அமைப்பு அன்று அனைவரது மனங்களிலும் இடம் பிடித்தது தான் என்னை இன்னும் அதீத சமூகப் பணியில் பயணிக்க தொடர்ந்து திட்டமிட மேலும் படி படியாய் உயர்வதற்கு வழி காட்டியாய் மாபெரும் மனித சக்தியென்றும் நான் சொல்லுவேன்…எனக்கு நம்மாழ்வார் இயற்கை வேலாண்மையில் பற்று உள்ளவரின் ஈடுபாடு அதிகம்..அவரின் வழிகண்டும் அதில் ஆர்கானிக் என்ற முறையில் கலப்பிடமில்லாத நாட்டு விதைகள், கீரைகள் என பலவிதமான வீட்டு காய்கரிகள் தோட்டம் அமைப்பது பற்றி விழிப்புணர்வு தருவதும், அதற்கான பயிர் விதைகளை தாமே விற்பனை செய்து வருமானத்தை ஈடுகட்ட பலருக்கு வழிவகுத்து தருவதிலும்,இப்படி இன்று மக்களுக்கு நவீன முறையில் சிறப்பான வகையில் இயக்கை முறையை கொடுத்து வருவது தான் எங்களது அமைப்பின் செயல்பாடுகள்..
இதில் இன்னும் சிறபம்சமாக மாடித் தோட்டம் என பயிரிட்டு அதில் வீட்டின் தேவைகளையும் பூர்தி செய்து குறுகிய வருமானமும் அதிக லாபம் தரக்கூடிய வழிகளில் இன்று பல வீடுகளில் இருக்கும் பெண்மணிகளுக்கு தாம் முடிந்த வரையில் இது போன்ற விழிப்புணர்வும் கொடுத்தும் வருகிறோம்.
இதில் 50 சென்ட் கொண்ட இடத்தில் நீர் நிலை அதிகம் செலவிடாமலே மகசூலை பெற அரசு சார்ந்து லோன் பெற்று அதன் மூலம் ஒருபகுதி கடன் ரத்து செய்யப்பட்டும் மேலும் மாதம் கனிசமான தொகை ரூபாய் 10000/ வருமானம் வரக்கூடிய அளவிற்கு இதன் வழிகாட்டியாய் ருத்தரன் அவர்களின் வழிகாட்டுதலும் உண்டு என்கிறார் சாந்தி..
இதில் இன்னும் பெரிதா சொல்லவேண்டுமென்றால் உயர் தொழில் நுட்ப முறையில் பசுமை குடில் அமைத்தும் அத்திட்டத்தின் கீழ் நிகர லாபம் ஈட்ட அரசு வழிவகையிலும் எங்கள் இயற்கை வழி அறக்கட்டளை வழி காட்டி வருகிறது..
எனக்கென்று ஓர் பியூட்டிசன் சென்டரும் வைத்துள்ளேன்..டைலரிங் என இதுபோன்ற கற்றல் திறன்களையும் பலருக்கு கற்றுத் தருகிறார்.. சாந்தியின் என்னற்ற சாதனைத் திட்டங்களைப் பற்றியும் கேட்டறிந்தோம் இறுதியாய் சாந்தி தன் பிறந்து வளர்ந்த மணலி ஊரான இப்பகுதியை நல்ல காற்று இயற்கை சூழல் உருவாக இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற விழிபுணர்வு பேரணி நடத்தி வீடுதோரும் நல்ல மரக்கன்று கொடுத்து அவரவர் வீடுகளில் இயற்கை சார்ந்த காற்றை உருவாக்கி நோய் இல்லா வாழ்வை வளமாக்கிடுவதே எனது இலட்சியம் என்றார் சாந்தி பெருமிதத்துடன்.
அவர்களது அலுவலகத்தில் இருந்து நீண்ட இடைவேலைக்குப் பிறகு புதுவரவு மாதழ் ரிப்போர்ட்டர் விடைபெற்றார் மகிழ்வுடன்…
………………………
N.Deivaraj, Reporter
Leave a Reply