ஹோலி என்றால் உற்சாகமாக வட மாநிலங்களில் மதுரா, வாரணாசி போன்ற இடங்களில் கொண்டாடும் பண்டிகை. இப்போதே ஹோலியின் கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.
இம்மாத 21ம் தேதி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, ஆனால் முன்கூட்டியே இவ்வார முழுக்க இந்த கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
மேலும் இதில் சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள், மற்றும் ஆடல் பாடல்கள் லாத் மார்க் ஹோலி எனப்படும் தடியால் , ஆண்கள் பெண்களின் கும்மி நடனம் போன்ற பல்வேறு நிகழ்வுகளால் பண்டிகையின் உற்சாகத்தில் மக்கள் திழைக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகைய கொண்டாடி வருகின்றனர். இது வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஒரு பண்டிகையாகும். அனைத்து மதத்தினரும் இதனை மகிழ்வுடன் கொண்டாடி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க வழிவகுக்கிறது.
Leave a Reply