நான்கு நாட்களாக உணவின்றி, குளிரில் நடுங்கி தவித்த 75 முதியவருக்கு ஆதரவு கரம் நீட்டிய சமூக ஆர்வலர் தெய்வராஜ்!

Share Button

திருப்பூர் :-

நான்கு நாட்களாக உணவின்றி, குளிரில் நடுங்கி தவித்த 75 முதியவருக்கு ஆதரவு கரம் நீட்டிய சமூக ஆர்வலர் தெய்வராஜ் :-

தள்ளாத வயதில் நடை தளர்ந்தாலும், நிதானம் இழந்தாலும் உயிர் உள்ளவரை ஒருவருக்கு உணவு, உடை, அரவணைப்பு, பாதுகாப்பு இவைகள் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி.

வயது முதிர்ந்த காலத்தில் உற்றார் உறவுகளின் அரவணைப்பு மிகவும் அவசியம் என்பதை நாம் ஏன் மறந்து போனோம். காலத்தின் கட்டாயம் என்னவோ நாம் தினம்தினம் அனாதைகளாக சுற்றித்திரியும் சூழலே இன்றை காலக்கட்டத்தில் அதிகமாக நிலவுகிறது.

அனைத்துத் தாய்த்தமிழ் உறவுகளும் போகிப்பண்டிகை, தைப்பொங்கல் கொண்டாடுகின்ற இந்த பிசியான நேரத்திலும் கூட திடீர் வந்த அழைப்பை ஏற்று சேவை செய்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர், சமூக ஆர்வலர் ந.தெய்வராஜ் அவர்களை எவ்வளவு பாராட்டினால் தகும்.

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் தண்ணீர்பந்தல் பேருந்து நிறுத்தத்தை அடுத்த ஐயங்கார் பேக்கரி கடையோரம் அருகே ஆதரவற்று வயதான முதியவர் ஒருவர் 4 நான்கு நாட்களாக உணவின்றி, குளிரில் அவஸ்தை பட்டு வந்ததை அப்பகுதி பொதுமக்கள் கவலையோடு தெரிவித்ததின் அடிப்படையில் சமூக ஆர்வலர் ந.தெய்வாஜ் அவர்களுடன் நண்வர்களும் இணைந்து முதியவரை மீட்டெடுத்து உரிய பாதுகாப்பை வழங்கி உள்ளனர்.

இம்முதியவரைப் பற்றி தண்ணீர் பந்தலில் இருக்கும் ஹரிபிஷாத் என்பவர் அவரது துணைவியார் மற்றும் சக நண்பர்கள் உதவியுடன் திருப்பூர் நிட்சிட்டிரோட்டரி அமைப்பின் பிரகாஷ்குமார் அவர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அவர் அந்த முதியவர் இருக்கும் இடத்திற்கு வந்ததும் மேற்காணும் தகவல்படி நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் நிறுவனருமான தெய்வராஜ் அவர்களை அழைத்து தகவலை தெரிவித்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில் உடனே அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள முதியவரை நேரில் சந்தித்து முதியவரின் நிலைமையை விசாரித்து பார்த்ததில், இந்த முதியவர் பெயர் வடிவேல் வயது 75 மேல் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. சொந்த ஊர் காரைக்குடி பக்கம் எனவும்,  நாடக கலைக்குழு ஆசிரியராகவும் பணி புரிந்து வந்ததாகவும் தெரிகிறது.

வயது முதிர்வு காரணமாக உள்ள இவரது நிதானம் சற்று குறைவு என்பதால் இவர் உறவுகளிடமிருந்து கைவிடப்பட்டிருக்கலாம் அல்லது சம்மந்தப்பட்ட மகனோ மருமகள் இவர்கள் ஏதோ ஒரு சூழலில் புறக்கணிக்கபட்டு இருக்கலாம் என சமூக ஆர்வலர் ந.தெய்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவரது வயதான நிலையிலும் சாலைகளில் நிதானமினறி பாதுகாப்பில்லாது உணவின்றி தவித்தும் மார்கழி, தை மாதம் என்பதால் குளிரில் நடுங்கியதும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் மனவேதனை அடைந்த இந்த சூழ்நிலையில் ந.தெய்வராஜ் அவர்கள் இம்முதியவரை முதியோரை காப்பகத்தில் சேர்க்க முயற்சி செய்தனர்.

தக்க சமயத்தில் திருப்பூரை அடுத்த பாறையூத்து செம்மாண்டாம்பாளையம் எனும் இடத்தில் இயங்கி வரும் “வள்ளலார் கருணை இல்லம் அறக்கட்டளை” அமைப்பில் பாதுகாப்பான முறையில் இங்கிருந்து ஆட்டோவில் ஏற்றி சக உறவுகள் உதவியுடன் அனுப்பர்பாளையம் பகுதியில் கடந்த 22 ஆண்டு காலமாக இயங்கி வரும் “நியூதெய்வாசிட்டிஅறக்கட்டளை” மற்றும் “நிட்சிட்டிரோட்டரி பிரகாஷ்குமார்” ஆகிய அமைப்புகள் இணைந்து நேற்றைய தினம் வயதான தாத்தாவிற்கு மறுவாழ்வு அளிக்கும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

வள்ளலார் முதியோர் காப்பக நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஐயாஅவர்களை நாம் அனைவரும் வணங்கி போற்றிடுவோம் என்று சமூக ஆர்வலர் ந.தெய்வராஜ் அவர்கள் தெரிவித்தார்.

ஆதரவற்றவர்களுக்காக சமூக சேவையில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையை தொடர்பு கொள்ள கீழே உள்ள தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

என்றென்றும் சேவைப் பணியில் ந.தெய்வராஜ், போத்தம்பாளையம், திருப்பூர்.
செல்: 9442372611 / 8667789076

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *