கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து (மின் கதிர்வீச்சுகளைத்) தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. ஜீவகாந்த சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால்கூட நோய் நீங்கும் வல்லமையை உணர்வீர்கள்.
தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம் என்று முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை (வைரம்) கொண்டு மாலை, தடி உருவபடுத்தப்படுகிறது. இது ஆன்மீக வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை நிகழ்த்துகிறது இதனின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை.
எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை. நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் ரத்தக் குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய் போன்றவை நீங்கும். உடல் பலமடையும். மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும் மிகுந்த பலன் அளிக்கும்.
எல்லா கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் பொழுது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள் அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் கிரகித்து வெளியேறுகின்றன.
எனவே இதனை உடன் வைத்திருக்கும் பொழுது எதிரிகளின் தொல்லை, செய்வினை பிரச்சனை, நோய் மற்றும் மரண பயம் நீங்கும், காரிய சித்தி அடையும். தொழில் வளர்ச்சி அடையும். பண தட்டுப்பாடு நீங்கும். குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பல அதீத பயன் உடையது.
தேவைக்கு தொடர்பு கொள்வீர்
Leave a Reply