தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
குறிப்பிடத்தக் அளவில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமானது முதல் கன மழை கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், சென்னை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது.