தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்

Share Button

சென்னை :-

தமிழ்நாட்டிலுள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அதனைத் தொடர்ந்து இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. எனவே 32 சுங்கச்சாவடிகளை அகற்றப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.