உத்திரபிரதேசத்தில் மீண்டும் பரபரப்பு !
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட நிலையில் நாளை ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்திற்குப் பயணம்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 10 மாதங்களுக்கு மேலாக டெல்லியிலும் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்றுவருகிறது. உத்திரப் பிரதேசம் மாநிலத்திலும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அம்மாநிலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் உத்திர பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா கலந்து கொள்வதாக இருந்தார் அவர் வரும் போது அவரது காரை வழிமறித்து பா.ஜ.கவினருக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துப் போராடுவது எனப் போராட்டக்காரர்கள் முடிவெடுத்து இருந்தனர்.திட்டமிட்டபடி பாஜகவினர் வாகனங்களில் வழிமறித்து கறுப்புக்கொடி காட்டி போராடினர்.
இந்நிலையில் பா.ஜ.கவினரின் கார் ஒன்று போராட்டக்காரர்கள் மீது மோதியதில் இரண்டு விவசாயிகள் பலியானார்கள் பலர் படுகாயமடைந்தனர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பா.ஜ.கவினர் கார்களை அடித்து நொறுக்கியும் தீயிட்டுக் கொளுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தில் நான்கு விவசாயிகள் ஒரு பத்திரிகையாளர்கள் என ஒன்பது பேர் பலியானார்கள்.இந்த சம்பவத்தைக் காரணமாக உத்திரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்கிம்பூர் கேரிக்கு அவரது ஆதரவாளர்களுடன் சென்றார் அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் இரண்டு நாட்களாகப் பிரியங்கா காந்தியை தடுப்புக்காவலில் வைத்திருந்த நிலையில் இன்று (5/10/2021) அவரை கைது செய்தனர்.அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை விடுதலை செய்யக்கோரி உத்தரப் பிரதேசம் சீதா பூரில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தியும் மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டும் ஊர்வலம் மேற்கொண்டுள்ளனர்.
ஊர்வலம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினர் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி போராட்டத்தில் பலியான குடும்பத்தினர் நேரில் சந்திக்க நாளை லக்கிம் பூர் செல்வதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply