முற்றிலும் முடங்கிய சமூகவலைத்தளங்கள், குழம்பிப்போன நெட்டிசன்கள்
இணையம் முடங்கியதா ? இதயம் முடங்கியதா ?
உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்,மெசேஞ்சர் ஆகியவை நேற்று இரவு 9.30 மணியிலிருந்து முற்றிலுமாக முடங்கியது. சமூக வலைத்தளங்கள் முடங்கிய சிறிதுநேரத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,மெசேஞ்சர் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் இருந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமூக வலை தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,மெசேஞ்சர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளது எனவும்,பிரச்சனை சிறிது நேரத்தில் சரி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதற்கு முன்பு இதுபோல தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கி உள்ளது.ஆனால் உடனடியாக பிரச்சினை சரி செய்யப்பட்டு மீண்டும் சமூகவலைத்தளங்கள் இயங்க தொடங்கும் ஆனால் நேற்று (4/10/2021 )இரவு 9.30 மணிக்கு முடங்கிய சமூகவலைத்தளங்கள் காலை 4 மணி வரை பயன்படுத்த முடியாமல் போனது.இந்த நான்கு சமூக வலைத்தளங்களும் திடீரென முடங்கிப் போனதால் அவற்றைப் பயன்படுத்தி வரும் இணையத்தளவாசிகள் குழப்பத்திற்கும் அவதிக்கும் உள்ளானார்கள்.
நான்கு சமூக வலைதளங்களும் இயங்காமல் போன விவகாரம் ட்விட்டரில் #serverdown என்ற ஹேஷ்டேக் மூலம் பல மீம்ஸ்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இந்த மூன்று சமூக வலைத்தளங்களையும் இணைக்கும் திட்டம் செயல்பட்டு வருவதாகவும் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் செகர்பெர்க் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது…
Leave a Reply