கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் ஐந்து வகையான தொழிற் சார்ந்த பயிற்சி வகுப்புகள் IVDP தொண்டு நிறுவன நிறுவனர் குழந்தை பிரான்சில் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் கல்லூரி படிப்பு முடிந்த உடன் அவர்கள் ஏதாவது ஒரு தொழிலில் பயிற்சி முடித்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற சீரிய நோக்கில் அரசு கல்லூரியும், IVDP தொண்டு நிறுவனமும் இணைந்து தையல்கலை, கணிணியில் டேலி, அழகுகலை, தையல்கலை சிறப்பு பயிற்சி மற்றும் மேஹந்தி, புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்ட 5 – வகையான தொழிற்சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு துறையிலும் 100 மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. IVDP தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் நடத்தப்படும் இந்த பயிற்சிகளின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தமிழ் துறை தலைவர் கீதா அவர்கள் தலைமை வகித்தார். IVDP தொண்டு நிறுவன நிறுவனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் கலந்து கொண்டு பயிற்ச்சிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்சியில் கல்லூரி பேராசிரியர்கள் லாவண்யா, உமா, வள்ளிசித்ரா, ஜெயந்தி, கல்பனா, தமிழ்நாடு போட்டோகிராபர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் சிவகுமார், பயிற்சியாளர்கள் அசோக்பாபு, ஐஸ்வர்யா, ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply